- கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.
- மற்றவர்களையும் அன்போடு பாருங்கள்.
- நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
- கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்
- அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்.
- நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்.
- செய்யும் வேலையை நேசத்துடன், நேர்மையுடன், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
- கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்.
- நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புக்களை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
- எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதை பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
- சில நிமிடத்தில் உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.
- கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். முகத்தை கழுவுங்கள் அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.